தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறொரு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம் இடம்பெற்றது.
இதற்கான நடவடிக்கைகள் நேரடியாகவும் ஒன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்து இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் 15 திகதி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
